ஆலங்குளத்தில் வாகனம் மோதி மான் பலி

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒக்கநின்றான் மலைப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இரவு நேரங்களில் உணவு, குடிநீர் தேடி இவைகள் ரோட்டுப்பகுதிக்கு உலா வருவது வழக்கம். இந்த நிலையில் சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் விரைந்து சென்ற வனத்துறையினர் அதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

