மாயனூர் கதவணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு.
மாயனூர் கதவணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு. கர்நாடகாவில் கொட்டி தீர்த்த கனமழையில் மேட்டூர் அணைக்கு வந்த கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவுணைக்கு இன்று காலை நிலவரப்படி 62,383 கன அடி நீர் வந்தது. இதில் நான்கு பாசன வாய்க்கால்களில் 1470 கன அடி நீரும் காவிரி ஆற்றில் 60913 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலைஅணைக்கு நீர்வரத்து 48,141 கனஅடியாக இருந்தது. இதனால் காவேரி ஆறு இருகறைகளையும் தொட்டு செல்லும் ரம்மியமான காட்சி யாக உள்ளது.
Next Story





