வடுகநாதம்பள்ளி - டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.

வடுகநாதம்பள்ளி - டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.
வடுகநாதம்பள்ளி - டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்யு வயது 20 . இவர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வடுகநாதம் பள்ளியில் இருந்து மலைக்கோவிலூர் செல்லும் சாலையில் டூவீலரில் சென்றார். இவரது வாகனம் வடுகநாதம் பள்ளி அருகே உள்ள நெடும்பலி அருகே சென்றபோது, எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம் மாசிலாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வயது 47 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் அபிமன்யு டூ வீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அபிமன்யுவை கரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story