பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பாராட்டு விழா

பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பாராட்டு விழா
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட கனகப்பரத்தைச் சேர்ந்தவர் பொன்.மனாபவரா (60). இவர் 1988-ல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்பூரில் தனது பணியை தொடங்கினார். கடந்த 38 வருடங்களாக இந்தியாவில் பல தொழிற்ச் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களில் என பல்வேறு இடங்களில் பணியாற்றினார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி  வந்தவர் கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி தன் பணியை நிறைவு செய்து பணி ஓய்வு பெற்றுள்ளார். பணி செய்து ஓய்வு பெற்ற  பொன். மனாபவராவுக்கு  கனகப்பபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நீதிபதி பெ.ஜெயராஜ் தலைமை தாங்கினார்.  விழாவில் ஆன்மீகப் பெரியோர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவின் நாயகன் பொன். மனாபவராவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.
Next Story