உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, பேரணியைத் துவக்கி வைத்தார்.
உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி பெரம்பலூரில் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, பேரணியைத் துவக்கி வைத்தார். தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்,மலரட்டும் மனிதநேயம் மனித உரிமையை மதி
மனித நேயமே மானுட பண்பு
ஒற்றுமையே மனிதநேயம் மகிழ்வித்து மகிழ் உதவிட அஞ்சாதே மனிதம் பழகு மனிதநேயமே மனிதனின் அடையாளம் அன்பைக் கொடுத்து பெறுவோம் மனிதமே உண்மை மனிதனே உயர்வு மனிதம் காப்போம் மனிதம் போற்றுவோம் அன்பின் வழியே மனத்தின் ஒளி அன்பே அறம் மனிதமே வரம் யாதும் ஊரே யாவரும் கேளிர் மனிதத்தின் சிரிப்பில் இறைவனை காணலாம் போன்ற மனிதநேய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் வேந்தர் அவர்கள் தனது உரையில், "மனிதாபிமானம் என்பது எல்லைகளையும், மதங்களையும், இனங்களையும் தாண்டிய ஒன்று. சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் நலனைக் கருதி செயல்பட வேண்டும். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் எப்போதும் சமூகப் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. இன்றைய பேரணி மாணவர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்று பேசினார். மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். அருண்ராஜ் ஐ ஏ எஸ் அவர்கள் தனது உரையில், "உலக மனிதாபிமான தினம் என்பது மனிதர்களுக்குள் கருணை, அன்பு, உதவி மனப்பாங்கு ஆகியவற்றை வளர்க்கும் ஒரு சிறப்பான நாள். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளில் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். இவ்விழிப்புணர்வு பேரணி மாணவர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் மனிதாபிமான பணிகளில் ஈடுபடச் செய்யும்" "மனிதாபிமானம் என்பது சமூகத்தில் அமைதியை உருவாக்கும் அடித்தளம். ஒவ்வொரு குடிமகனும் மற்றவரை மதித்து, உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். காவல்துறை எப்போதும் சமூக நலனுக்காக மக்கள் உடன் நிற்கிறது. மாணவர்கள் சமூக சேவைக்கு முன்வரும்போது, அது நாட்டின் எதிர்காலத்தை உறுதியாக்கும்" என்று கூறினார். பேரணி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து துவங்கி, பாலக்கரை வெங்கடேசபுரம், சங்குபேட்டை, பழைய பேருந்து நிலையம் வழியாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என 15000 பேர் பேரணியில் பங்கேற்றனர். மனிதாபிமானத்தின் அவசியம் குறித்து பலகை வாசகங்கள் மற்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சி பெருமளவு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
Next Story