கோவை: சிங்காநல்லூர், இருகூரில் நின்று செல்லும் ரயில்கள் - பொதுமக்கள் மகிழ்ச்சி !

X
கோவை சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில்கள் நிறுத்தம் பெற்று இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு இங்கு நின்று சென்ற ரயில்கள், பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுத்தம் பெறாமல் போனது. இதனால் பொதுமக்கள் சிரமம் அனுபவித்தனர். அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 18 முதல் திருச்சி–பாலக்காடு, கோவை–நாகர்கோவில் ரயில்கள் மீண்டும் இங்கு நின்று செல்கிறது. மேலும் இருகூர், சோமனூர் நிலையங்களில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் சாலை, கழிவறை, முன்பதிவு வசதி, நடைமேடை, மேம்பாலம் போன்றவை உருவாக்கப்படும். இந்த நடவடிக்கையால் கோவை கிழக்கு பகுதி வளர்ச்சி பெறும் என்றும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

