கரூர் - மதுரை சர்வீஸ் சாலையில் அடையாளம் தெரியாத டூவீலர் மோதி டேங்கர் லாரி மேலாளர் மற்றும் ஊழியர் படுகாயம்.

கரூர் - மதுரை சர்வீஸ் சாலையில் அடையாளம் தெரியாத டூவீலர் மோதி டேங்கர் லாரி மேலாளர் மற்றும் ஊழியர் படுகாயம்.
கரூர் - மதுரை சர்வீஸ் சாலையில் அடையாளம் தெரியாத டூவீலர் மோதி டேங்கர் லாரி மேலாளர் மற்றும் ஊழியர் படுகாயம். கரூர் அடுத்த ஆத்தூர் பிபிசிஎல் டேங்கர் லாரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் சண்முகநாதன் வயது 56 . இதே நிறுவனத்தில்குளித்தலை நெய்தலூர் அருகே உள்ள செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 24 என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு 10:45 மணி அளவில் கரூர் - மதுரை சர்வீஸ் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது , அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று சந்தோஷ் குமார் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மேலாளர் மற்றும் சந்தோஷ் குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story