மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம்
X
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ ஏரி காத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம், இன்று சிறப்பாக நடைபெற்றது. சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த சில மாதங்களாக கோயிலில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. கோபுரங்கள், சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, கோயில் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகத்தின் போது, பட்டாச்சாரர்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" என பக்தி முழக்கமிட்டு இறைவனை வழிபட்டனர். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு ராமபிரான் சீதையை கை கோத்த நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில்தான் ராமானுஜர் துறவற தீட்சை பெற்று, உடையவர் என்று அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் கர்னல் பிளேஸ், கனமழையால் உடைய இருந்த மதுராந்தகம் ஏரியை ராமபிரான் வில்லேந்தி காத்ததை நேரில் கண்டார். இந்த அதிசய நிகழ்வுக்குப் பிறகு, இந்த கோயில் "ஏரி காத்த ராமர் கோயில்" என்று அழைக்கப்படுகிறது. நடைபெற்ற கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையும், கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story