அரசு பேருந்து சாலையோர உள்ள ஓடை பள்ளத்தில் சரிந்து விபத்து!

X
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பேருந்து ஒன்று 46 பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியுள்ளது. பேருந்தினை ராமநாதபுரம் மாவட்டம் மேல செல்லூரைச் சேர்ந்த செல்வத்துரை என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். கொத்தங்குளத்தை சேர்ந்த செல்லத்துரை நடத்துனராக பணியாற்றியுள்ளார். பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் - காலங்கரைபட்டி இடையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பகுதி ஆக்சில் கட்டாகி பேருந்து நிலை தடுமாறி அருகிலிருந்த உப்பு ஓடை பகுதியில் உள்ள பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அருகில் இருந்த புளியமரத்தில் மோதாமல் பள்ளத்தில் சரிந்து நின்றது. இதில் பேருந்தில் பயணம் செய்த 46 பயணிகளுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

