திருச்செங்கோடு நகராட்சியில் ஆறாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருச்செங்கோடு நகராட்சியில்உள்ள 33 வார்டுகளில் பதினோரு கட்டங்களாக பிரித்து ஒரு கட்டத்திற்கு மூன்று வார்டுகள் என உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆறாம் கட்டமாக திருச்செங்கோடு நகராட்சியைச் சேர்ந்த 2,3, மற்றும் ஐந்தாவது வார்டுகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு அரசின் 13 துறைகளைச் சேர்ந்த 43 சேவைகள்வழங்க உடனடியாக மனுக்கள் பெறப்பட்டு 45 நாட்களில் தீர்வு காணும் வகையில் முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு நெசவாளர் காலனி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பிரேம் ஆனந்த் துப்புரவு அலுவலர் சோலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் உடனடி தீர்வு காணப்பட்ட வரி விதிப்பு பெயர் மாற்ற உத்தரவினை ரங்கராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டது. மேலும் பலருக்கும் உடனடியாக சான்றுகள் வழங்கப்பட்டது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெருவிளக்கு வேண்டும் என மனு கொடுத்தனர் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க வந்தனர். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை காவல்துறை சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முகாமில் பட்டா மாறுதல்,மகளிர் உரிமைத் தொகை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், ராஜா, செல்லம்மாள் தேவராஜன், தாமரைச்செல்வி மணிகண்டன், புவனேஸ்வரி உலகநாதன், திவ்யா வெங்கடேஸ்வரன்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story




