வன விலங்கு தாக்குதலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தர்ணா !

X
கோவை மாவட்டம் வால்பாறை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மக்களை தாக்கி உயிரிழப்புக்கும், பயிர் மற்றும் சொத்து சேதத்துக்கும் காரணமாகி வருவதாகக் கூறி, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை தவறிவருவதாக குற்றம் சாட்டிய அவர்கள், யானைகள் நுழைவைத் தடுக்கும் அகழிகள், சூரிய மின் வேலிகள் அமைக்க வேண்டும் என்றும், மனிதர்களை தாக்கும் சிறுத்தை, புலி போன்ற வேட்டை விலங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், பயிர் காப்பீடு வழங்கல், வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், 2006 வன உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தல், வனப்பகுதியில் விலங்குகளுக்கான உணவு, தண்ணீர் வசதிகளை மேம்படுத்தல் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இந்த தர்ணா போராட்டத்தால் வன அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
Next Story

