மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவர் கைது

மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவர் கைது
X
மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த குருமலையை சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து விருந்து நடத்தி வருவதாக தூத்துக்குடி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் குருமலை, ஊத்துப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடம்பூர் அருகே உள்ள கொத்தாளி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மான் கறி சமைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டபோது, புள்ளி மானின் 4 கால்கள், 2 கத்தி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தோட்டத்தில் இருந்த பன்னீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் முத்துப்பாண்டி (38) என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த மானின் 4 கால்கள், ஒரு கார், 2 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திருநெல்வேலி மாவட்டம் குறிச்சி குளத்தைச் சேர்ந்த சுடலைமணியை தேடி வருகின்றனர்.
Next Story