முந்திரி தொழிலாளர்களுக்கு ஓண போனஸ் அறிவிப்பு

முந்திரி தொழிலாளர்களுக்கு   ஓண போனஸ் அறிவிப்பு
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு திருவோணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான போனஸ் கோரிக்கையை சிஐடியு முந்திரி தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. முந்திரி ஆலை நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிஐடியு முந்திரி தொழிலாளர் சங்கத்திற்கும் முந்திரி ஆலை நிர்வாகத்திற்கு இடையே போனஸ் உடன்பாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டு போனஸ் போன்று இந்த ஆண்டும் 20 சதவீதம் போனஸ், இரண்டு சதவீதம் ஊக்கத்தொகை, 5 சதவீதம் விடுப்பு கால ஊதியம் சேர்த்து 27 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொழிலாளர்கள் மேற்கண்ட அடிப்படையில் கணக்கிட்டு போணஸ் பெற்றுக் கொள்ளுமாறு முந்திரி தமிழ்நாடு முந்திரி பருப்பு சி ஐ டி யு தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சிங்காரன் தெரிவித்துள்ளார்.
Next Story