போலீஸ்காரரை மோதி தள்ளிவிட்டு மாயமான கார்

X
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்த் (32). இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். நேற்று தனது பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். தக்கலை முளகுமூடு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த மர்ம கார் ஒன்று பைக் மீது மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமி காந்த் படுகாயம் அடைந்தார். அவரை சுங்கான்கடைப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, மோதி தள்ளிய மர்ம கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

