வாணியம்பாடி அரசு மருத்துவமனை முன்பு தருண போராடம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனை முன்பு தருண போராடம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் நோயாளிக்கு ரத்த கொதிப்பு மாத்திரைக்கு பதிலாக இருதைய நோய்க்கான மாத்திரைகள் வழங்கி அதனை 21 நாட்களாக உட்கொண்டு வந்ததால் உடல் நலம் பாதிப்பு. உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் அமர்ந்து தர்ணா. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஷமீம் பீ (53). இவர் சிகிச்சைக்காக நியூடவுன் பகுதியில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த 29 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் ரத்த கொதிப்புக்கு மாத்திரை எழுதிக் கொடுத்துள்ளார். அதனை மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காண்பித்து மாத்திரையை பெற்றுக் கண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுத்த மாத்திரையை அவர் 21 நாட்களாக உட்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று இரவு அவருடைய உறவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ரத்த கொதிப்பு அதிகமாக இருந்ததால் இவர் சாப்பிட்டு வந்த மாத்திரை மற்றும் அரசு மருத்துவர் கொடுத்த மாத்திரை சீட்டு வாங்கி பார்த்து உள்ளார். அதில் அரசு மருத்துவர் ரத்தக்கொதிப்புக்கு எழுதிக் கொடுத்த மாத்திரைக்கு பதிலாக இருதய நோய்க்கான மாத்திரை வழங்கி உள்ளதும் அதனை அவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த ஷமீம் பீ மற்றும் அவரது உறவினர்கள் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மாத்திரைகளை மாற்றி கொடுத்த விவகாரம் குறித்து கேட்டபோது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதால் ஆத்திரமடைந்த நோயாளி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மாத்திரைகள் மாற்றி கொடுத்தவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக செல்லும் பொது மக்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி: 1) எஸ்.சத்தாம் ஹுசைன் - பாதிக்கப்பட்டவரின் உறவினர். 2) ஷமீம் பீ - பாதிக்கப்பட்ட பெண்.
Next Story