அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய அளவில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் அகில இந்திய கருப்பு தினம் என இன்றைய தினத்தை அனுசரித்து அனைத்து வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அனைத்து வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் செல்வி வரவேற்றுப் பேசினார் சங்க பொருளாளர் மும்தாஜ் துவக்க உரையாற்றினார் கோரிக்கைகளை விளக்கி ஒன்றிய துணைத் தலைவர் சகுந்தலா பேசினார் தொடர்ந்து ஒன்றிய துணைத் தலைவர் கவிதா கோரிக்கைகளை விளக்கி பேசினார் முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க வட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாழ்த்து பேசினார் இறுதியாக ஒன்றிய இணைச் செயலாளர் சங்கீதா நன்றி கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதார் சரி பார்த்து முகப்பதிவு செய்து சத்துமாவு வழங்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் முன்பு ஒரு கையெழுத்து பெற்று சத்து மாவு வழங்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் இல்லாவிட்டால் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் நவீன செல்ஃபோன்கள் வழங்கி 5g சிம் வழங்க வேண்டும் அங்கன்வாடி மையங்களில் 5g wi-fi வழங்க வேண்டும் போடின் டிராக்கரில் பணிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை 5,000 வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் பயனாளர்களின் தரவுகளை பதிவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருச்செங்கோடு சி ஹெச் பி காலனியில் உள்ள வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது குறித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி கூறும் போது முகப்பதிவு முறையையும் ஆதார் ஆய்வு செய்யும் முறையையும் தகுந்த உபகரணங்கள் இல்லாமல் செய்ய இயலாத சூழ்நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளனர் அவர்களுக்கு புதியதாக நவீன செல் போன் மற்றும் 5ஜி சிம் வைபை ஆகியவை வழங்க வேண்டும் சென்ற முறை இருந்த கையெழுத்து பெற்று சத்து மாவு வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
Next Story