கரூர்-கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பகுதி நேர நியாய விலை கடைகளை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

கரூர்-கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பகுதி நேர நியாய விலை கடைகளை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கரூர்-கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பகுதி நேர நியாய விலை கடைகளை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் புதிய பகுதிநேர நியாய விலை கடைகளை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கடவூர் வடக்கு ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கொள்ளு தண்ணி பட்டியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து அப்பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்குஉணவு பொருட்கள் வழங்கினார். இதே போல அருகிலுள்ள வெள்ளப்பட்டி ஊராட்சி சின்னதேவன்பட்டி கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், அரசு அலுவலர்கள்,திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story