கையில் குடையுடன் போக்குவரத்தை சரி செய்த உதவி ஆய்வாளர்

X
மதுரையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநாட்டிற்காக லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாடு நடைபெற்ற பாரபத்தி பகுதியில் அதிகாலை முதலிலேயே குவிய தொடங்கினர். இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொண்டர்கள் பலர் மயக்கம் போட்டு கீழே விழும் நிலை ஏற்பட்டது அவர்களுக்கு முதல் அறிவித்து மேல் சிகிச்சைக்காக பத்துக்கு மேற்பட்டோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்கு வழிச்சாலையில் குடையுடன் சாலையின் நடுவே நின்று போக்குவரத்து காவலர் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.
Next Story

