அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
Komarapalayam King 24x7 |21 Aug 2025 9:11 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளகப் புகார் குழு மற்றும் குமாரபாளையம் வட்டம் சட்டப்பணிகள் குழு இணைந்து ஏற்பாடு செய்த சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்து வாழ்த்தி பேசினார். பேராசிரியர் முரளிதரன் வரவேற்றார். இதில் வழக்கறிஞர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிவில் குற்றவியல் போக்சோ சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டம் பற்றியும், மாணவர்கள் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு சட்டங்கள் குறித்து பல பயனுள்ள கருத்துக்களை பேசினார். பேசிய கருத்துக்கள் குறித்து மாணவ,, மாணவியர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் கூறிய மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சட்டங்களை பின்பற்றி நடப்போம் என்று மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் விடியல் பிரகாஷ், தன்னார்வலர் வேல்முருகன், புகார் குழு உறுப்பினர் பேராசிரியை தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story


