பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தி..மு.க.வினர்.

பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தி..மு.க.வினர்.
X
குமாரபாளையத்தில் காவிரி வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு தெற்கு நகர தி.மு.க. சார்பில் உணவு வழங்கபட்டது.
குமாரபாளையத்தில் காவிரி வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு தெற்கு நகர தி.மு.க. சார்பில் உணவு வழங்கபட்டது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டியுள்ளது இதனை அடுத்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ள 50 ஆயிரம் கன அடி நீரானது 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவாய்த் துறையினர் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவேரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தெற்கு நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் உணவு வழங்கபட்டது. இதில் கவுன்சிலர் கனகலட்சுமி,
Next Story