தனியார் பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை

X
வெள்ளகோவில்-கரூர் சாலையில் ஜெயம் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று, வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு ஒத்திகை செய்துகாட்டினர். அப்போது, 'சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை, தீ விபத்து நேரிட்டால் அதை அணைக்கும் வழிமுறைகள்' குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில் பள்ளியின் தாளாளர் குப்புசாமி, தலைமை ஆசிரியர் ராம்குமார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

