வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

X
மூலனூர் அருகே உள்ள ஏரகாம்பட்டியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த லாரி, மூலனூர் அருகே வந்த போது, சாலை யோர மின்கம்பிகள், உரசியது. இதனால் அந்த லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. இதை கவனித்த டிரைவர், லாரியை நிறுத்தி விட்டு கீழே குதித்தார். அதற்குள் தீ, மளமளவென்று லாரி முழுவதும் பரவியது. இதையடுத்து உடனடியாக தாராபுரம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் வைக்கோலுடன் லாரி முழுவதும் எரிந்து நாசமானது.
Next Story

