முட்டை வியாபாரத்தில் கோடிக்கணக்கில் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் புகார் !

X
கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்செட் என்பவர், ஆசிரியர் என்ற பெயரில் முட்டை வியாபாரம் செய்வதாகக் கூறி பலரை வலியுறுத்தி இணைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் சரிவர முட்டைகள் வழங்கிய அவர், பின்னர் பொருட்களையும் லாபத் தொகையையும் வழங்காமல் தவறியதாக கூறப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் அவரிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். மொத்தத்தில் ஒரு கோடியும் மேற்பட்ட பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. விசாரணையில், ராம்செட் முன்பும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் பணத்தை மீட்டு தர கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Next Story

