எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்

X
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் மேற்கொள்ள செங்கல்பட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அருகில் முன்னாள் மேலேரிப்பாக்கம் கூட்டுறவு சங்கத் தலைவா், முன்னாள் ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் திருக்கழுகுன்ற மேற்கு ஒன்றிய பொருளாளா் சல்குரு ஏற்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட காட்டாங்குளத்தூா் அதிமுக மாவட்ட பிரதிநிதி உமாபதி உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட கழக செயலாளா் சிட்லபாக்கம் ராஜேந்திரன் காட்டாங்குளத்தூா் ஒன்றிய செயலாளா் சம்பத்குமாா் கலந்துகொண்டு அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக விளம்பர பதாகை ராட்சத பலூனை விண்ணில் பறக்கவிட்டனா். பின்னா், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட மகளிா் அணி, இளைஞா் அணி மாணவா் அணி ஒன்றிய நகர கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்
Next Story

