புலியூர் அருகே டூவீலரில் வேகமாக செலுத்தியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.
புலியூர் அருகே டூவீலரில் வேகமாக செலுத்தியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம். திருச்சி மாவட்டம் திருவெரும்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் மகேஷ் குமார் வயது 36. இவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதியம் 3:30 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் மயானம் அருகே வந்தபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறிந்த மகேஷ் குமாரின் தந்தை காத்தையன் அளித்த புகாரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




