மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை விமான நிலையத்தில் சோதனை

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை விமான நிலையத்தில் சோதனை
X
தூத்துக்குடி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பாரதிய ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருவதால் விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
தூத்துக்குடி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பாரதிய ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருவதால் விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருநெல்வேலியில் இன்று மாலை நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார் தூத்துக்குடி வாகைகுளம் விமான விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகை தரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருநெல்வேலி புறப்பட்டு செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் தூத்துக்குடி விமான நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி புறப்பட்டு செல்கின்றனர் இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் பயணிகள் கடும் சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி திருநெல்வேலி சாலையிலும் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Next Story