கரூரில் பிரம்ம குமாரிகள் - இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம்.
கரூரில் பிரம்ம குமாரிகள் - இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம். கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரம்மா குமாரிகள் மற்றும் கரூர் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. உலக சகோதரத்துவ நாள் மற்றும் ராஜ யோகினி தாதி பிரகாஷ்மணிஜி அவர்களின் 18 வது நினைவு நாளை முன்னிட்டு இந்த ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கரூர் இந்திய மருத்துவ சங்கம் செய்தது.
Next Story






