கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை ஆய்வு !
கோவை, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையை தமிழ்வளர்ச்சி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். அவர், அணையின் நீர்மட்டம், நீர்வெளியேற்றம், பில்லூர் குடிநீர் திட்டங்களின் செயல்பாடு, அணை தூர்வாருதல் மற்றும் குடிநீர் எடுக்கும் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அணையை தூர்வாரும் போது எடுக்கப்படும் மண்ணை கொட்டுவதற்கான இடங்களை வனத்துறை மற்றும் விவசாய நிலங்களில் கண்டறிய அறிவுறுத்தினார். ஆய்வின்போது கோவை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது, பில்லூர் அணையின் உயரம் 100 அடி. நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் இருந்து கெத்தை அணை வழியாக பில்லூருக்கு நீர் வருகிறது. சகதி அதிகமாக தேங்கியுள்ளதால் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதை சரிசெய்ய தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனர்.
Next Story



