அன்னூரில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது !

X
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரியாம்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தியபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தப்பிச் செல்ல முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (36) என்றும், கோவை ஆவாரம்பாளையத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார். சோதனையில் ஈடுபட்ட தாமோதரன், கோவிந்தராஜ் ஆகிய போலீசாரை, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டினார்.
Next Story

