மதுராந்தகத்தில் வியாபாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்ட அதிமுக பேனரால் வியாபாரிகள் அவதி

மதுராந்தகத்தில் வியாபாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்ட அதிமுக பேனரால் வியாபாரிகள் அவதி
X
மதுராந்தகத்தில் வியாபாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்ட அதிமுக பேனரால் வியாபாரிகள் கடும் அவதி
மதுராந்தகத்தில் வியாபாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்ட அதிமுக பேனரால் வியாபாரிகள் கடும் அவதி காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் இன்று மாலை 6 மணி அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி புரட்சித் தமிழர் எழுச்சி பயணம் கூட்டமானது நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வரவுள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை வரவேற்கும் வகையில் மதுராந்தகம் நகரம் முழுவதும் அதிமுக சார்பில் 10, 20 அடி பேனர்கள் வைத்துள்ளதால் மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பேனர்கள் அருந்து விழும் நிலையில் ஆடிக்கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகளும் அச்சப்பட்டு செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே மதுராந்தகம் நகர் பகுதியில் வியாபாரிகளுக்கு இடையூறாக பேனர்கள் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story