கோ-கோ விளையாட்டு போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற ராயல் பள்ளி

X
Komarapalayam King 24x7 |22 Aug 2025 4:58 PM ISTகுமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இரண்டாவது ஆண்டாக கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது
குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு சஹோதய கூட்டமைப்பு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையே கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது. ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 30 சி.பி.எஸ்.இ பள்ளிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர். தாளாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இவர் பேசியதாவது: விளையாட்டு மனதிற்கும் உடலுக்கும் மன வலிமையைத் தரும், விளையாடுவதன் மூலம் மன அழுத்தமானது குறைந்து கல்வியில் மேன்மை அடையலாம், என்று பேசினார். மாணவ மாணவிகளுக்கென நடத்தப்பட்ட 12 ,14 ,16 மற்றும் 19 வயதிற்குட்பட்ட அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்ற ராயல் சர்வதேசப் பள்ளி மாணாக்கர்களுக்கு பதக்கமும், கேடயமும் வழங்கப்பட்டன .ராயல் சர்வதேசப் பள்ளி ஓவர் ஆல் சாமபியன்ஷிப் பட்டத்தை வென்றது. செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதாஆனந்தன் மற்றும் முதல்வர் ராஜஸ்ரீ உள்பட பலர் பங்கேற்று, சாதனை படைத்த மணாக்கர்களை வாழ்த்தினர்.
Next Story
