ஈச்சர் லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் மூவர் பலி வெப்படை போலீசார் விசாரணை

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் மூவர் பலி வெப்படை போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியில் பட்டு நெசவு தொழில் செய்து வரும் மோகன் சுசிலா அவர்கள் தாயார் கமலம் மற்றும் சுகுமார் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் இன்று காலை ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் வழிபாடு மேற்கொண்டுவிட்டு மீண்டும் தங்கள் ஊர் வேம்படிதாளம் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சுகுமார் தனக்கு சொந்தமான ஆம்னி வேனை ஓட்டிக்கொண்டு அதில் நான்கு பேர் அமர்ந்து வந்தனர் . ஆம்னி வேன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் ஓட்டிய சுகுமார் தூங்கி விடவே, சாலையை விட்டு வேன் மண் சாலையில் சென்றது . அப்பொழுது கிருஷ்ணா பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது வேகமாக மோதியது.இதில் ஆம்னி வேன் ஓட்டிய சுகுமார் அவர் அருகில் இருந்த மோகன் மற்றும் சுகுமாரின் தாயார் கமலம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சுகுமாரின் மனைவி சுசிலா மோகனின் மனைவி புவனேஸ்வரி ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இது பற்றி தகவல் அறிந்த வெப்படை போலீசார் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story