தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி
X
தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி
துணை ஜனாதிபதியாக தமிழர் வருவதை தமிழக கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவது கிடையாது தமிழ், தமிழ் என்று அவர்கள் பேசுவது அர்த்த மற்றதாகிவிடும். கச்சத்தீவை மீட்டுக் கொடுக்க இருப்பது பாஜக அரசு, பிரதமர் நரேந்திர மோடி தான். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி. திருநெல்வேலியில் இன்று மாலை நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுப் பேசுகிறார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.. அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, அமித்ஷா தமிழகம் வருவது கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அடித்தளமாக செயல்படுகிறது என்பது மாற்றுக் கருத்து இல்லை. துணை குடியரசு தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை நிறுத்தி இருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை, ஒவ்வொரு தமிழனுக்கும் உலக அளவில் பெருமை, பெருமை வாய்ந்த நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கும் போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழர் பெருமையை நிலைநாட்ட துணை நிற்க வேண்டும். துரதிஷ்டவசமாக காங்கிரஸ் ஒரு தமிழரை எதிர்த்து துணை ஜனாதிபதியாக வருவதையும் அதற்கு ஆதரவு தருபவர்களையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவது கிடையாது. தமிழ், தமிழ் என்று அவர்கள் பேசுவது அர்த்தம் மற்றதாகிவிடும். தொடர்ந்து மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், இலங்கை அரசு மீனவர்களுக்கு கொடுக்கும் தொந்தரவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மீனவர்களுக்கான அச்சம் குறைந்து இருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீனவர்களின் குழுவோடு அடிக்கடி பேசி உண்மை நிலையை தெரிந்து, அரிந்து அதற்கேற்றவாறு கடினமான நடவடிக்கைகளை எடுத்து இலங்கை அரசோடு பேசிக்கொண்டிருப்பது தான் உண்மை நிலை, கச்சத்தீவை பொருத்த அளவில் கச்சத்தீவு காங்கிரஸ் அரசால் திமுக ஆட்சியில் இருந்தது என்பதை மீனவர்கள் நன்கு அறிவார்கள். கச்சத்தீவை தமிழக மீனவர்களுக்காக தமிழகத்திற்கு மீட்டுக் கொடுப்பது பாஜக அரசு பிரதமர் நரேந்திர மோடி ஆகத்தான் இருக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.. மீனவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றார்கள் என்றார்..
Next Story