கரூரில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை. ஒருவர் கைது.

கரூரில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை. ஒருவர் கைது.
கரூரில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை. ஒருவர் கைது. கரூர்-கோவை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கள்ள லாட்டரி விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 10 மணி அளவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது , கரூரை அடுத்த நெரூர் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் வயது 45 என்பவர் கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு , அவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த கள்ள லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்து கைது செய்தனர்.மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story