புனித அந்தோனியார் பள்ளி விளையாட்டு விழா
திருச்செங்கோடு சேலம் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி 38 வது விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றது போட்டிகளை திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில்சேலம் கட்டுமான நிறுவன உரிமையாளர் கார்த்திக் திருச்செங்கோடு நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், ராஜா, சினேகா ஹரிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் ஜோதியை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஏற்றி வைத்தார். தேசிய கொடியை திருச்செங்கோடு காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், ஒலிம்பிக் கொடியை கட்டுமான நிறுவன அதிபர் கார்த்திக் ஆகியோர் ஏற்றி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
Next Story



