விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து போலீசார் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து போலீசார் ஆலோசனை கூட்டம்
X
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாதுகாப்பாக நடத்துவது குறித்து காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் 34 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாதுகாப்பாகவும் அசம்பாவிதம் இன்றியும் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் G.ஆனந்த்,பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர். ஜெய்சங்கர்,காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், ஆகியோர் பங்கேற்றனர். ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நகர பொறுப்பாளர் ம.நல்வேலன், மாவட்ட செயலாளர் ராஜசேகர்மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சிலைகள் அமைத்துள்ள பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு 34 விநாயகர் சிலைகள் மாதம் 24 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு 30 ஆம் தேதி ஊர்வலம் நடைபெற உள்ளது.விநாயகர் சிலை ஊர்வலத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து காவல் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
Next Story