எடமேலையூரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி

மன்னார்குடியில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டிகள் நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எட மேலையூர் அரசு பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இடநிலையூர் விளையாட்டு கழகம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் சென்னை,நாகர்கோவில்,தஞ்சை திருச்சி கோவை,ஈரோடு என 12 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆண்கள் பிரிவில் தஞ்சை மற்றும் கோவை கைப்பந்து அணிகள் மோதின. அதே போல் பெண்கள் பிரிவில் ஈரோடு தர்மபுரி அணிகள் மோதின.மூன்று நாட்கள் முறையில் நடைபெறும் போட்டியில் 23ஆம் தேதி நடைபெற உள்ளது வெற்றி பெறும் அணியினருக்கு ரூபாய் ரொக்க பரிசும் சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளது.
Next Story