இராசிபுரத்தில், மாவட்ட அளவிலான குடியரசு தின - பாரதியார் தின தடகள விளையாட்டுப் போட்டி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்..

இராசிபுரத்தில், மாவட்ட அளவிலான குடியரசு தின - பாரதியார் தின தடகள விளையாட்டுப் போட்டி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்..
X
இராசிபுரத்தில், மாவட்ட அளவிலான குடியரசு தின - பாரதியார் தின தடகள விளையாட்டுப் போட்டி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், மாவட்ட அளவிலான குடியரசு தின - பாரதியார் தின தடகள விளையாட்டுப் போட்டிகளை (2025-2026), மாநில ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2 நாள்கள் நடைபெறும், இந்த மாவட்ட அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின தடகள விளையாட்டுப் போட்டிகளில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகள் பங்கேற்று விளையாடுகின்றனர். போட்டிகள் 14, 17, 19 வயது அடிப்படையில், நடைபெறுகின்றன. இன்று(22.8.2025) நடைபெறும் தடகள விளையாட்டுப் போட்டியில் 477 மாணவிகள் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன், தேசியக்கொடி மற்றும் விளையாட்டு தொடர்பான கொடிகளை ஏற்றி வைத்து, வீராங்கனைகளின் அணிவகுப்பை பார்வையிட்டு, வீராங்கனைகளின் அறிமுகம் செய்து, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த தடகள போட்டியில், இராசிபுரம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், பரமத்தி-வேலூர், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய 8 வட்டங்களை சேர்ந்த, மாணவிகள் பங்கேற்றனர், இதில், ஓட்டம் 100 மீட்டர், 200 மீ 1500 மீ, 3000 மீ, தடை தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல், தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல் உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடைபெற்றன. வரும் 25.8.2025 திங்கள்கிழமை அன்று நடைபெறும் போட்டியில் மாணவர்கள் 501 பேர் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். இரு தினங்களில் மொத்தம் 978 மாணவ-மாணவிகள் விளையாடுகின்றனர். ஏற்கனவே, மாவட்டத்தில் 8 குறுவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட அளவில் தற்போது போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் ஒவ்வொரு தடகள பிரிவிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின தடகள விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவார்கள். முன்னதாக வரும் (25.8.2025) திங்கட்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள், வெற்றிக் கோப்பைகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ப. மகேஸ்வரி, இராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா. குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.N.R. சங்கர், அரசு - தனியார் பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர் நடுவர்கள், அரசு, தனியார் பள்ளிகளின் மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Next Story