விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை
X
மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாதால் பொதுமக்கள் வேதனை
உதகை நகராட்சிக்குட்ப்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு விரிவாக்கம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை ................... உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையின் ஓரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இச்சாலையை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தி வரும் நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் உதகையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் சாலை சேரும் சகதியமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் சுமார் ஏழு வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு வயது குழந்தையும் காயம்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாலை விரிவாக்கம் பணிகள் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story