தேன்கனிக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் சீண்டல் வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது.

தேன்கனிக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் சீண்டல் வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது.
X
தேன்கனிக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் சீண்டல் வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தனியார் ரோஜா செடி வளர்க்கும் நர்சரியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை வீட்டில் இருந்து 5 வயது மகள் அழும் சத்தம் கேட்டு அவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா (30) அங்கிருந்து தப்பினார். மேலம் அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது. ஜித்தேந்திரா அந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்தது தெரியவந்தது. அந்த சிறுமியை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து ஜித்தேந்திரானை போக்சோவில் கைது செய்தனர்.
Next Story