கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

X
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் 18 கிராம ஊராட்சிகளில் நடந்தது. இதில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 22ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகதணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. புதூர் ஊராட்சி ஒன்றியம் மேல நம்பிபுரம் கிராம ஊராட்சியில்நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாமுருகேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பெருமாள்சாமி அனைவரையும் வரவேற்றார். இதில் புதூர் ஊராட்சி ஒன்றிய சமூக தணிக்கை வட்டாரவள பயிற்றுநர் முத்துமுருகன் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதில் கிராம வள பயிற்றுநர்கள் சுமதி, செல்வராணி, கெளசல்யா தேவி, தவசியம்மாள், பணித்தளப் பொருப்பாளர்கள் சந்திரா, கணினி உதவியாளர் மகேஸ்மேரி உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார். இதே போல் புதூர்ஒன்றியம் மேலக்கரந்தை உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
Next Story

