டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை
X
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி சாகுபுரத்தில் இயங்கி வரும் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படியும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, தூத்துக்குடி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணைந்து டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் புற வளாக மாதிரி பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. டி.சி.டபிள்யூ ஆலையில் அமைந்துள்ள, குளோரின் பிளாண்டில் உள்ள சேமிப்பு கலனில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டால் ஏற்படும் விபத்துகளை தடுக்க திரு சுரேஷ் உதவிதலைவர் (உற்பத்தி) மற்றும் கேசவன், மூத்த பொது மேலாளர் (உற்பத்தி) ஆகியோர் தலைமையில், அவசர கால பயிற்சி ஒத்திகை மிக சிறப்பாக, துரிதமுறையில் நடைபெற்றது. திருச்செந்தூர் சரக தீயணைப்பு துறையினர் விபத்துகால நடவடிக்கைகளை தொழிலக பாதுகாப்பு துறை உடன் இருந்தனர். புற வளாக மாதிரி ஒத்திகையாக அறிவிக்கப்பட்ட பின்னர் அருகில் உள்ள கிராமமான தலைவன்வடலி பகுதிகளில் வருவாய் துறை மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் துறை அவர்களின் முன்னிலையில மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்தில் அழைத்து மேலஆத்தூர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்து தக்க மருத்துவ மற்றும் அனைத்து அடிப்படை உதவிகளும் வழங்கப்பட்டது. ஒத்திகையானது ஆலையின் உள்ளே மற்றும் வெளியே நிறைவுற்ற பின்னர், அனைத்து துறை அதிகாரிகளும் டி.சி.டபிள்யூ கலையரங்கத்தில் குழுமி பயிற்சி ஒத்திகையின் மதிப்பாய்வு நடைபெற்றது. நிகழ்ச்சியின் மதிப்பாய்வு குழு தலைவராக சித்தார்த்தன். கூடுதல் இயக்குனர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மற்றும் தமிழ்செல்வன், இணை இயக்குனர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், ரவிக்குமார் துணை இயக்குனர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கலைவாணி மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் தலைமை பொறியாளர், பாலசுந்தரம் வட்டாசியர்-திருச்செந்தூர், கருணாகரன், அறுவை சிகிச்சை மருத்துவர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கணேசன் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, ராஜு மாவட்ட துணை தீயணைப்பு அதிகாரி, நட்டார் ஆனந்தி மாவட்ட துணை தீயணைப்பு அதிகாரி, முத்தமிழ் - அரசு மருத்துவர், மகாராஜன் சுகாதார ஆய்வாளர், மகேஸ்வரி ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் பிற பெரு நிறுவனங்களான ஸ்பிக், இந்தியன் ஆயில் கார்பரேசன் லிட், பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிட், சூப்பர் கேஸ், வின்பாஸ்ட், ஆகியோர் கலந்து கொண்டு டி.சி.டபிள்யூ நிர்வாகம் நடத்திய பாதுகாப்பு புற வளாக மாதிரி ஒத்திகையினை குறித்து விவாதித்தனர்.
Next Story