கோவை: உயர்கல்விக்காக போராடும் மூதாட்டி !

X
கோவை, தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராணி (70), கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வில் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மேற்படிப்பு படிக்க ஆர்வம் கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விண்ணப்பித்தும், வயதை காரணம் காட்டி சேர்க்கை மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த அவர், “கல்விக்கு வயது தடை இல்லை என்கிறார்கள். ஆனால் என்னை மேற்படிப்பில் சேர விடாமல் தடுக்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுத்து நான் விரும்பும் படிப்பை தொடர உதவ வேண்டும்” என கண்கலங்கக் கோரினார்.
Next Story

