கீழ்குளம் பேருராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
குமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சரளா கோபால் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் ரகுநாதன் ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். 1250 க்கு மேற்பட்ட மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். மகளிர் உரிமைத் தொகை, முதலமைச்சர் காப்பீடு திட்டம் மற்றும் முதியோர் உதவித்தொகை, நலவாரிய அட்டை மற்றும் மருத்துவ சார்ந்த உதவிகள் என 18க்கு மேற்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
Next Story

