கோவை: லஞ்சம் பெற்ற வரி வசூலர் கைது !

X
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் பில் கலெக்டர் சதீஷ்குமார் (40), வீட்டுமனை வரன்முறைப்படுத்த ரூ.40,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஆனந்தவேல் (53), வீட்டுமனைக்கு வரன்முறை பெற விண்ணப்பித்தபோது, கட்டணமாக ரூ.25,000க்கு மேலாக சதீஷ்குமார் ரூ.40,000 லஞ்சம் கேட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வலைவீசி, ரசாயன தடவிய ரூ.40,000 பணத்தைப் பெற்றுக்கொண்ட சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர், அவரது அலுவலகம் மற்றும் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story

