கலப்பு திருமணத்தை ஏற்காதால் மீனவர் மீது தாக்குதல்

X
குமரி மாவட்டம் நீரோடி கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ் (55) மீனவர். இவரது மகள் மாற்று சமூகத்தை சார்ந்த வாலிபரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 20ஆம் தேதி திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணத்தில் சகாயராஜுக்கு விருப்பம் இல்லை. இதனால் நேற்று தனது பொருட்களை எடுத்துக்கொண்டு போக சகாயராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரது சகோதரி மகன்கள் கிறிஸ்டின், ஜான் பால், அவரது மகன் ஷா புராஜ் மற்றும் உறவினரை சேர்ந்து அவரை தாக்கி தாக்கியுள்ளனர். சகாயராஜ் குழித்துறை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

