கோவை: அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் குற்றச்சாட்டு – விசாரணை கோரிக்கை !

X
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் தங்கள் தாவரவியல் மற்றும் இசை ஆசிரியர்களின் தவறான நடத்தை குறித்து குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளனர். மாணவிகள் கூறுவதில், இசை ஆசிரியர் செல்வராஜ் நடன பயிற்சியின் போது இடுப்பைத் தொட்டு தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், தாவரவியல் ஆசிரியர் பாலு வகுப்பில் ஊக்கப்படுத்தும் போது முதுகு மற்றும் தொடை பகுதிகளைத் தொட்டுப்பேசுவதாகவும் குற்றம் செய்துள்ளனர். இதனால் மாணவிகள் அவமானத்திலும் அச்சத்திலும் உள்ளனர். மாணவிகள் எதிர்காலத்தில் மற்ற மாணவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களுடைய பிராக்டிகல் மதிப்பெண்கள் பாதிக்கப்படுவார் என்ற அச்சத்திலும் இருந்தபோதும் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இவற்றை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

