கோவையில் கல்வி உதவித்தொகை பெயரில் ஆன்லைன் மோசடி – மாணவர்கள் புகார் !

கோவை மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என கூறி பெற்றோர்களிடம் ஆன்லைன் மோசடி செய்த மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என கூறி பெற்றோர்களிடம் ஆன்லைன் மோசடி செய்த மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவலின்படி, கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, “தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் இருந்து அழைக்கிறோம். கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது” எனக் கூறி சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் வீடியோ கால் மூலம் ஜி.பே, போன் பே போன்ற செயலிகளின் ஸ்கேன் குறியீட்டை பயன்படுத்த வலியுறுத்தி, பல லட்சம் ரூபாயை மோசடி கும்பல் பறித்துள்ளது. மேலும், ஒரே பள்ளியில் படித்து வெளியேறிய 30-க்கும் மேற்பட்டோரின் பெற்றோர்களை குறிவைத்து இவ்வாறு மோசடி செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். “கல்வி உதவித்தொகை பெயரில் எங்கள் பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மோசடியில் போன பணத்தை மீட்டு தர வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story