புத்தகத் திருவிழாவை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா தொடங்கியது- 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா தொடங்கியது- 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 6ஆவது புத்தக திருவிழா தொடங்கி உள்ளது தூத்துக்குடி தருவை மைதானத்தில் தொடங்கியுள்ளன இந்த புத்தகக் கண்காட்சியில் 110 க்கு மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளான லட்சக்கணக்கான புத்தகங்கள் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார் இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியின் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி என்பது நடத்தப்பட்டு வருகிறது இந்த புத்தக கண்காட்சியில் மூலம் இளைய தலைமுறையினர் இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் புத்தகங்களை வாங்கி பயன்படுத்த வருகிறார்கள் ஒரு புத்தகத்தை படிப்பதின் மூலம் அந்த எழுத்தாளரின் அனுபவங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் இதன் மூலம் புத்தகத்தில் உள்ள சூழலியல் வாழ்வியல் குறித்தும் தெரிந்து கொண்டு தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்தார் இதைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் இந்த புத்தக கண்காட்சியை பார்த்து ரசித்து புத்தகங்களை வாங்கி சென்று வருகிறார்கள் இந்த புத்தக கண்காட்சி ஆனது வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தா் லால் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story