காங்கேயத்தில் இருக்கும் காருக்கு மதுரை டோல்கேட்டில் பணம் எடுப்பு

X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.கே. சிவானந்தம். இவரது செல்போனுக்கு கடந்த 18-ந் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள எலியார்பதி சுங்கச்சாவடி வழியாக கார் சென்றதற்காக ரூ.90 பற்று வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவானந்தம் உடனடியாக அந்த சுங்கச் சாவடியை தொடர்பு கொண்டு, விசாரித்தார். அவர்கள் அந்த கார் கடந்து செல்லும் வீடியோவை அனுப்பி வைத்தனர். அப்போது தான் இவருடைய காரின் பதிவு எண் கொண்ட மற்றொரு கார் போலியாக இவருடைய காரின் எண்ணை பொருத்தி சென்றதும், அந்த காரில் அ.தி.மு.க. கொடி கட்டி இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து சிவானந்தம் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் போலி பதிவு எண்ணை பொருத்தி செல்லும் காரை குற்ற சம்பவங்களுக்கு பயன் படுத்தலாம். எனவே எலியார்பதி சுங்கச்சாவடியில் உள்ள தகவலை பெற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கார் யாருடையது என விசாரிக்க வேண் டும்' என தெரிவித்துள்ளார்.
Next Story

